இந்தியா

இந்தியாவில் கரோனா பாதிப்பு 24 ஆயிரத்தைக் கடந்தது; பலி 775-ஆக உயர்வு

DIN


இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,506 -ஆக அதிகரித்துள்ளது. இதுவரை நோய்த்தொற்றுக்கு 775 பேர் பலியாகியுள்ளனர். 

மத்தியு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சனிக்கிழமை 9 மணி நிலவரப்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,425 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நோய்த்தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 23,077 -இல் இருந்து 24,506 -ஆக அதிகரித்துள்ளது. தற்போது  18,668 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்புள்ளவர்களின் எண்ணிக்கை 4,813-இல் இருந்து 5,063-ஆக அதிகரித்துள்ளது. 

கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு தொற்று பாதித்துள்ளவர்களின் எண்ணிக்கை 6,817 ஆகவும், பலி எண்ணிக்கை 301- ஆகவும் உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக குஜராத்தில் 2,815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 127 பேர் உயிரிழந்துள்ளனர், தலைநகர் தில்லியில் 2,514 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 53 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் அதிகபட்சமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT