இந்தியா

கரோனா: தில்லியில் பாதிப்பு எண்ணிக்கை 2,625ஆக உயர்வு

DIN

தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,625ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அந்த வைரஸால் இதுவரை 26,496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 824 பேர் பலியாகியுள்ளனர். 

இந்த நிலையில் தலைநகர் தில்லியில் நேற்று மட்டும் 111 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் இன்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,625ஆக உயர்ந்துள்ளது. 

அவர்களில் 1,518 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றன. 869 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்னர். மேலும் அங்கு கரோனாவுக்கு இதுவரை 54 பலியாகியுள்ளனர். ஜாக்ஜீவன் ராம் மருத்துவமனையில் 40 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT