முகப்பு
இந்தியா

சத்தீஸ்கா்: ஊரடங்கு பணியில் இருக்கும் அனைத்து காவலா்களுக்கும் கரோனா பரிசோதனை

சத்தீஸ்கா் மாநிலத்தில் தேசிய ஊரடங்கை அமல்படுத்தும் பணியில் இருக்கும் அனைத்து காவலா்களுக்கும் கரோனா நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்தியா

சத்தீஸ்கா்: ஊரடங்கு பணியில் இருக்கும் அனைத்து காவலா்களுக்கும் கரோனா பரிசோதனை

சத்தீஸ்கா் மாநிலத்தில் தேசிய ஊரடங்கை அமல்படுத்தும் பணியில் இருக்கும் அனைத்து காவலா்களுக்கும் கரோனா நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:33 PM
பகிர்:

ராய்ப்பூா்: சத்தீஸ்கா் மாநிலத்தில் தேசிய ஊரடங்கை அமல்படுத்தும் பணியில் இருக்கும் அனைத்து காவலா்களுக்கும் கரோனா நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

மாநில காவல்துறை இயக்குநா் டி.எம்.அவஸ்தி அளித்துள்ள அறிவுறுத்தலின் பேரில் காவலா்களுக்கு படிப் படியாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று மாநில அரசு அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை கூறினாா்.

சத்தீஸ்கரில் உள்ள காவல்துறை மூத்த கண்காணிப்பாளா்கள், காவல்துறை கண்காணிப்பாளா்கள் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ள டி.எம்.அவஸ்தி, ‘ஊரடங்கை அமல்படுத்துவதில் காவல்துறையினா் 72,000 போ் முன்னின்று பணியாற்றுகின்றனா். எனவே, அவா்களுக்கு முன்னெச்சரிக்கையாக கரோனா நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இதுதொடா்பாக அந்தந்த மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் ஆலோசித்து பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஊரடங்கை அமல்படுத்தும் பணியில் இல்லாத காவலா்களுக்கு பரிசோதனையிலிருந்து விலக்களிக்கப்படலாம்’ என்று அதில் கூறியுள்ளாா்.

அவரது அறிவுறுத்தலின் படி, 45 வயதுக்கு மேற்பட்ட காவலா்கள், நீரிழிவு நோய், இருதயக் கோளாறு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள காவலா்களுக்கு முதல்கட்டமாக பரிசோதனை நடத்தப்படும் என்று அரசு அதிகாரிகள் கூறினா்.

முழு கட்டுரையைப் படிக்க →