முகப்பு
இந்தியா

ஒடிசாவில் மேலும் 7 பேருக்கு கரோனா: பாதிப்பு 118-ஐ எட்டியது

ஒடிசாவில் மேலும் ஏழு பேருக்கு கரோனா நோய்த் தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 28 ஏப்ரல், 2020 at 10:53 AM
பகிர்:

புவனேஸ்வர்: ஒடிசாவில் மேலும் ஏழு பேருக்கு கரோனா நோய்த் தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கரோனா பாதிப்பும், பலியும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், ஒடிசாவில் செவ்வாய்க்கிழமை இன்று காலை நிலவரப்படி மேலும் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 118-ஐ எட்டியுள்ளது. 

சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி, 37 பேர் குணமடைந்துள்ளனர். 80 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளார். 

Advertisement

இந்நிலையில், கரோனா வைரஸுக்கு உலகளவில் 3,064,895 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் அந்த வைரஸால் 2,11,609 பேர் பலியாகியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.