முகப்பு
இந்தியா

கரோனா தடுப்புப் பணி: ஒருநாள் ஊதியத்தை வழங்கும் ரிசர்வ் வங்கி ஊழியர்கள்

கரோனா தடுப்புப் பணிக்காக பிரதமர் நல நிதிக்கு ரிசர்வ் வங்கி ஊழியர்கள் இணைந்து ரூ.7.30 கோடி நிதி வழங்குகின்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:33 PM
கோப்புப்படம்
பகிர்:

கரோனா தடுப்புப் பணிக்காக பிரதமர் நல நிதிக்கு ரிசர்வ் வங்கி ஊழியர்கள் இணைந்து ரூ.7.30 கோடி நிதி வழங்குகின்றனர்.

கரோனா தடுப்புப் பணிக்காக தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் 'பிரதமர் நல நிதிக்கு' நிவாரணம் வழங்க பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்திருந்தார். 

பிரதமரின் இந்த கோரிக்கையினை ஏற்று தொழிலபதிபர்கள், தன்னார்வலர்கள் பலர் கரோனா தடுப்புப் பணிக்காக நிதி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், மத்திய ரிசர்வ் வங்கி ஊழியர்கள் குறைந்தது தங்களது ஒருநாள் ஊதியத்தை அளிக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, ரிசர்வ் வங்கி ஊழியர்கள் இணைந்து பிரதமர் நல நிதிக்கு ரூ.7.30 கோடி வழங்க உள்ளதாக ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →