முகப்பு
இந்தியா

'கரோனாவால் உயிரிழக்க நேரிடும் துறைமுக ஊழியர் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம்'

அனைத்து பெரிய துறைமுகங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் கரோனா பாதித்து உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும் என்று மத்திய கப்பல் போக

Updated On : 28 ஏப்ரல், 2020 at 5:09 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:03 PM


புது தில்லி: அனைத்து பெரிய துறைமுகங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் கரோனா பாதித்து உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை  அறிவித்துள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து பெரிய துறைமுகங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் இதர ஒப்பந்த ஊழியர்கள் யாரேனும் கரோனா பாதித்து உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்துக்கு அல்லது சட்டரீதியான வாரிசுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுகங்களில் பணியாற்றும் போது கரோனா தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால், அதன் ஊழியர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த இழப்பீடு கரோனா தொற்று பேரிடர் காலத்துக்கு அல்லது 2020 செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.