முகப்பு
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் கரோனா பரவும் 6 அபாயப் பகுதிகள் கண்டுபிடிப்பு

ஜம்மு காஷ்மீரில் கரோனா நோயாளிகள் அதிகம் கொண்ட 6 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆறு பகுதிகளில் இருந்துதான் 80% கரோனா நோயாளிகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

Updated On : 29 ஏப்ரல், 2020 at 2:52 PM
pdk28todaystest_2804chn_12_4
பகிர்:


ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் கரோனா நோயாளிகள் அதிகம் கொண்ட 6 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆறு பகுதிகளில் இருந்துதான் 80% கரோனா நோயாளிகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

அதன்படி, ஜம்மு காஷ்மீரில் மொத்தமாக 565 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 381 பேர் தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சுமார் 80% நோயாளிகள், ஜம்முவின் ஒரு மாவட்டத்திலும், காஷ்மீரின் பந்திபோரா, ஸ்ரீநகர், சோபியான், குப்வாரா, பாரமுல்லா ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்களாவர்.

Advertisement

இது குறித்து ஜம்மு காஷ்மீரின் தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் புபீந்தர் குமார், தினந்தோறும் இங்கு ஆயிரம் முதல் ஆயிரத்து நூறு பேருக்கு கரோனா நோற்று குறித்து பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் இந்த பரிசோதனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இவர்களில் 80 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை. அறிகுறி இல்லாதவர்களுக்கு உரிய நேரத்தில் கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்படாவிட்டால், அது மேலும் அபாயத்தை ஏற்படுத்திவிடும் என்று புபீந்தர் குமார் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.