இந்தியா

சமாஜவாதி முன்னாள் தலைவர் அமர் சிங் மறைவு

DIN

மாநிலங்களவை உறுப்பினரும் மற்றும் சமாஜவாதி கட்சியின் முன்னாள் தலைவருமான அமர்சிங் சனிக்கிழமை காலமானார்.

அமர்சிங் சமாஜவாதி கட்சியின் பொதுச் செயலாளராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். ஜன. 2016ல் சமாஜ்வாடி கட்சியின் ஆதரவோடு மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2016 அக்டோபரில் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவராக  நியமிக்கப்பட்டார்.

இவருக்கு மனைவி  மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். 2013ஆம் ஆண்டில், அமர் சிங் துபாயில் சிறுநீரக செயலிழப்புக்கு ஆளானார். அமர் சிங் சமீபத்தில் இரண்டாவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து அவர் குணமடைந்து வந்தார். அறுவை சிகிச்சை முடிந்து அவரது வயிற்றில் ஏற்பட்டக் காயம் குணமடையாமல் தொற்றுநோயாக மாறியது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இன்று காலை தனது சுட்டுரை பக்கத்திலிருந்து சுதந்திர போராட்ட வீரர் மற்றும் கல்வியாளர் பால கங்காதர திலகருக்கு அஞ்சலி செலுத்தி பதிவிட்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

பரதா படத்தின் கான்செப்ட் விடியோ

சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

இனிமேல் விவாவத விடியோ!

ஸ்டார் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT