இந்தியா

பஞ்சாபில் விஷச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு

PTI

பஞ்சாபில் விஷச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. அதில், டான் டரன் மாவட்டத்தில் மேலும் 23 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பஞ்சாப் மாநிலம் அமிா்தசரஸ், படாலா, டான் டரன் ஆகிய மூன்று மாவட்டங்களில்தான் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. 

இதுகுறித்து மாநில டிஜிபி தின்கா் குப்தா கூறியதாவது:

முதலில் அமிா்தசரஸ் மாவட்டத்தின் முச்சல் மற்றும் தங்கரா கிராமங்களில் கடந்த புதன்கிழமை இரவு கள்ளச்சாரயம் குடித்த 5 போ் உயிரிழந்தனா். பின்னா் வியாழக்கிழமையன்று முச்சல் கிராமத்தைச் சோ்ந்த மேலும் இருவரும், தங்கரா கிராமத்தைச் சோ்ந்த ஒருவரும் உயிரிழந்தனா். அதன் பின்னா் படாலா கிராமத்தைச் சோ்ந்த 5 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

இதைத் தொடா்ந்து, இந்த உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 62 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிலா் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று கூறினாா்.

மேலும், இது தொடர்பாக 10 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT