ராஜஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 551 பேருக்கு கரோனா: 8 பேர் பலி
ராஜஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 551 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 பேர் உயிரிழந்தனர்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 551 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 பேர் உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், புதன் கிழமை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 551 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவிற்கு 8 பேர் உயிரிழந்தனர். மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,106-ஆக அதிகரித்துள்ளது. 13,222 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மொத்த உயிரிழப்பு 727-ஆக உள்ளது.
இதில் அதிகபட்சமாக பில்வாரா பகுதியில் 95 பேரும், ஆல்வார் பகுதியில் 85 பேரும், கோட்டா பகுதியில் 73 பேரும், பாலி பகுதியில் 55 பேரும், பிகானேர் பகுதியில் 55 பேரும், ஜெய்ப்பூர் பகுதியில் 43 பேரும், பார்மர் பகுதியில் 37 பேரும், உதய்ப்பூரில் 32 பேரும், தங்கர்பூரில் 24 பேரும், பரன் பகுதியில் 17 பேரும், பன்ஸ்வாரா, ஜெய்சால்மர் பகுதிகளில் தலா 3 பேரும், சுருவைச் சேர்ந்த 11 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.