முகப்பு
இந்தியா

பாஜகவில் இணைகிறாரா திமுக எம்எல்ஏ கு.க. செல்வம்?

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைய உள்ளதாதாக தகவல்கள் கசிந்தன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
பாஜகவில் இணைகிறாரா திமுக எம்எல்ஏ கு.க. செல்வம்?
பகிர்:

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைய உள்ளதாதாக தகவல்கள் கசிந்தன.

தில்லியில் உள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இல்லத்துக்கு திமுக எம்எல்ஏ கு.க. செல்வம் வந்தார். நட்டாவுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

முன்னதாக, கு.க. செல்வம் இன்று மாலை பாஜகவில் இணைய உள்ளார் என்ற செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் அவர் நட்டாவின் வீட்டுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சந்திப்புக்குப் பின் ஜே.பி. நட்டாவின் வீட்டுக்கு வெளியே அவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அவர் பாஜகவில் இணையவில்லை என்றும், மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்கவே தில்லி வந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →