இந்தியா

இந்தியாவில் கரோனாவால் குறைந்த தங்கம் இறக்குமதி

DIN

இந்தியாவில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டு தங்கம் இறக்குமதி 24% குறைந்துள்ளது. 

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பல்வேறு நாடுகளிலும் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது.

பொதுமுடக்கம் காரணமாக வழக்கமான வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதார அளவிலும் கடுமையான நெருக்கடிகள் எதிர்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஜூலை மாதத்தில் இந்தியாவின் தங்க இறக்குமதி ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்ததைவிட 24% வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த வருடம் ஜூலை மாதத்தில் 39.66 டன் தங்கத்தை இறக்குமதி செய்த உலகின் இரண்டாவது பெரிய நுகர்வோராக இந்தியா இருந்தது. ஆனால், அது தற்போது குறைந்து நடப்பாண்டு 30 டன்னாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஜூலை மாதத்தின் தங்க இறக்குமதி ஒரு வருடத்திற்கு முன்பு 17.1 கோடி டாலர்களிலிருந்து 17.8 கோடி டாலர் வரை உயர்ந்துள்ளது. தங்கம் மீதான முதலீடுகள் அதிகரிப்பதால் நாளுக்கு நாள் விலை அதிகரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

SCROLL FOR NEXT