இந்தியா

தில்லியில் மேலும் 1,299 பேருக்குத் தொற்று, 1008 பேர் குணமடைந்தனர்: சுகாதார அமைச்சர்

ANI

தேசிய தலைநகரான தில்லியில் மேலும் 1,299 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வியாழக்கிழமை தெரிவித்தார். 

மேலும், மாநிலத்தில் கரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1,41,531 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10,348 பேர் வீடுகளிலும், தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு மையங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 1,008 பேர் குணமடைந்த நிலையில், 15 பேர் பலியாகியுள்ளனர். 

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வெளியிட்ட தகவலின்படி, 

தேசிய தலைநகரான தில்லியில் கரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

தற்போது வரை 1,27,124 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை இந்த நோய்க்கு 4,059 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

நகைக்கடை உரிமையாளா் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

SCROLL FOR NEXT