இந்தியா

ஆந்திரத்தில் 2 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு

DIN

ஆந்திர மாநிலத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியது. 

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வரிசையில், அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அதைத்தொடர்ந்து, தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், தில்லி, உத்தர பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. 

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலில், மாநிலத்தில் இன்று புதிதாக 10,171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனா பாதித்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 2,06,960ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு கரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 89 பேர் பலியாகியுள்ளனர். 

இத்துடன் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 1,842ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 7,594 பேர் குணமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஒட்டுமொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1,20,464ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 84,654 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆந்திர மாநிலத்தை பொறுத்தவரை தொடர்ந்து இன்றுடன் 3ஆவது நாளாக கரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 10,000ஐ தாண்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT