முகப்பு
இந்தியா

ஜார்கண்டில் விஷவாயு தாக்கியதில் 6 பேர் பலி

ஜார்கண்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 6 பேர் பலியானார்கள். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
கோப்புப் படம்
பகிர்:

ஜார்கண்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 6 பேர் பலியானார்கள். 

ஜார்கண்ட் மாநிலம், தியோகர் மாவட்டத்தில் வீடு ஒன்றின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய 2 தொழிலாளர்கள் அதனுள் இறங்கினர். நீண்ட நேரமாகியும் இருவரும் திரும்பவில்லை. இதையடுத்து வீட்டின் உரிமையாளரின் 2 மகன்கள் என அடுத்தடுத்து 4 பேர் இறங்கியிருக்கிறார்கள். 

ஆனால் அவர்களும் மேலே வரவில்லை. 6 பேரும் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. பிறகு அக்கிராமத்தினர் கழிவுநீர் தொட்டியை உடைத்து 6 பேரை மீட்டு தியோகர் சதார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த ஜூலை 21ஆம் தேதி கர்வா மாவட்டத்தில் இதேபால் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது 3 பேர் விஷவாயு தாக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →