​கேரள நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளதாக இடுக்கி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். (கோப்புப்படம்) 
இந்தியா

கேரள நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு

​கேரள நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளதாக இடுக்கி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

DIN


கேரள நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளதாக இடுக்கி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இடுக்கி மாவட்டம் மூணாறு அருகேவுள்ள ராஜமாலா பகுதியில் தொடர் கனமழை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. அந்தப் பகுதியிலிருந்த தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வந்த 82-க்கும் அதிகமாக தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கினர். இதைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 37 ஆக இருந்த நிலையில், தற்போது மேலும் 5 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 5. லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலமைப்பு தின உறுதியேற்பு

புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் உள்பட 7 போ் கைது

நாகை: 23 மாணவா்களுக்கு ரூ.2.58 கோடி கல்விக்கடன்

குருகிராம்: போக்குவரத்து காவல் அதிகாரியிடம் பணம் பறிக்க முயற்சி! இரு போலி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைது!

3 ஊழல் வழக்குகள்: ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு!

SCROLL FOR NEXT