முகப்பு
இந்தியா

இறந்த மனைவியின் மெழுகுச் சிலையுடன் புதுமனை புகுவிழா நடத்திய கணவர்!

ஆந்திரத்தைச் சேர்ந்த ஒருவர், உயிரிழந்த தனது மனைவியின் உருவத்தை மெழுகுச் சிலையாக வடித்து புதுமனை புகுவிழாவில் இடம்பெறச் செய்துள்ளார்.

Updated On : 10 ஆகஸ்ட், 2020 at 8:13 PM
மனைவியின் உருவத்தை மெழுகுச் சிலையாக வடித்த கணவர்
பகிர்:

ஆந்திரத்தைச் சேர்ந்த ஒருவர், உயிரிழந்த தனது மனைவியின் உருவத்தை மெழுகுச் சிலையாக வடித்து புதுமனை புகுவிழாவில் இடம்பெறச் செய்துள்ள உருக்கமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

ஆந்திர மாநிலம் பெல்லாரி அருகே கோப்பால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ் குப்தா. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார். 

இந்நிலையில், ஸ்ரீனிவாஸ் குப்தா சமீபத்தில் புதிய வீடு ஒன்றை கட்டி,  புதுமனை புகுவிழா நடத்தியுள்ளார். இந்த சுபநிகழ்ச்சியில் மனைவி இல்லாத வருத்ததைப் போக்க, மனைவியின் உருவத்தை மெழுகுச் சிலையாக வடித்து  இடம்பெறச் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகின்றன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.