தாணேவில் வணிக வளாகத்தில் தீ விபத்து
மகாராஷ்டிரத்தின், தாணே மாவட்டத்தின் உல்ஹாஸ் நகரில் மூன்று அடுக்குமாடி வணிக வளாக கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தீயணைப்பு அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தின், தாணே மாவட்டத்தின் உல்ஹாஸ் நகரில் மூன்று அடுக்குமாடி வணிக வளாக கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தீயணைப்பு அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
பிரஸ் பஜார் தரை தளத்தில் உள்ள ஒரு அச்சிடும் நிறுவனத்தின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணிக்கு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு மேல் தளங்களுக்கு தீ பரவியுள்ளது.
அச்சிடும் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பொருள்களால் தீ விரைவாகப் பரவியது என்று உல்ஹாஸ்நகர் நகராட்சி மன்றத்தின் தலைவர் பாலாசாகேப் நெட்கே தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு ஐந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. திங்கள்கிழமை காலை 8.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார். தீ விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை நடந்து வருகிறது.