முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் 80 ஆயிரத்தைத் தாண்டியது பாதிப்பு: இன்று 1,256 பேருக்குத் தொற்று

தெலங்கானாவில் இன்று புதிதாக 1,256 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், மாநிலத்தில் மொத்த தொற்று எண்ணிக்கை 80,751 ஆக உயர்ந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
Telangana reports 1,256 new COVID-19 cases as overall tally crosses 80K mark
பகிர்:

தெலங்கானாவில் இன்று புதிதாக 1,256 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், மாநிலத்தில் மொத்த தொற்று எண்ணிக்கை 80,751 ஆக உயர்ந்துள்ளது. 

ஆகஸ்ட் 9-ம் தேதி இரவு 8 மணி நிலவரப்படி ஒரேநாளில் 10 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 637 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இதுவரை தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,586 ஆகவும், தற்போது மருத்துவமனையில் 22,528 பேரும் சிகிச்சையில் உள்ளனர். 

15,789 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலில் மற்றும் கரோனா மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆகஸ்ட் 9ஆம் தேதி மட்டும் 11,609 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, ஒட்டுமொத்தமாக இதுவரை 6,24,840 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. 

மேலும், ஹெல்ப்லைன், டெலிமெடிசின் மற்றும் தகவல்களுக்கு 104 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம். 

தனியார் மருத்துவமனைகள்,  ஆய்வகங்கள் தொடர்பான தகவல்களுக்கு 9154170960  என்ற வாட்ஸ் ஆப் எண்ணைப் பயன்படுத்தலாம் என்று சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.