உத்தரகண்டில் கனமழையால் நிலச்சரிவு: சாலைகள் சேதம்
உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலியில் கன மழையை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள சாலைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.
உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலியில் கன மழையை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள சாலைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.
சாமோலி மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த கனமழையைத் தொடர்ந்து, பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள கடைகள் அனைத்தும் நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளன.
நிலச்சரிவினால் நெடுஞ்சாலையில் உள்ள மரங்கள் வேறொடு சாய்ந்துள்ள நிலையில், மின்கம்பங்களும் சாலையில் விழுந்துள்ளன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
உத்தரகண்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு ஒருசில பகுதியில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.