Pranab Mukherjee continues to be critical: Hospital 
இந்தியா

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவமனை தகவல்

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ராணுவ மருத்துவமனை தெரிவித்த

PTI

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பிரணாப் முகர்ஜி கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி நள்ளிரவு ராணுவ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர், மருத்துவப் பரிசோதனையில் அவரது மூளை ரத்த நாளத்தில் மிகப்பெரிய ரத்த அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளதால், அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடல்நிலையில் தற்போது வரை எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT