ஊழியர்கள் ஆன்லைனில் இ-பாஸ் பெற ஏற்பாடு: ரயில்வே அறிவிப்பு
ரயில்வே ஊழியர்கள் எளிதாக இ-பாஸ் பெறும் வகையில் புதிய நடைமுறையை இந்திய ரயில்வே அறிமுகம் செய்கிறது.
இந்தியாஊழியர்கள் ஆன்லைனில் இ-பாஸ் பெற ஏற்பாடு: ரயில்வே அறிவிப்பு
ரயில்வே ஊழியர்கள் எளிதாக இ-பாஸ் பெறும் வகையில் புதிய நடைமுறையை இந்திய ரயில்வே அறிமுகம் செய்கிறது.
ரயில்வே ஊழியர்கள் எளிதாக ஆன்லைனில் இ-பாஸ் பெறும் வகையில் புதிய நடைமுறையை இந்திய ரயில்வே அறிமுகம் செய்கிறது.
நாட்டில் பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் மாநிலங்கள் அல்லது மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு இ-பாஸ் தேவைப்படுகிறது. இந்நிலையில், ரயில்வே ஊழியர்கள் பணி நிமித்தமாக, வெளி மாநிலங்கள் அல்லது வெளி மாவட்டங்கள் செல்ல இ-பாஸ் பெறுவதற்கு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதன்படி, ஊழியர்களின் மனிதவள மேலாண்மை அமைப்பின் மூலமாக இ -பாஸ் பெற விண்ணப்பிக்க முடியும். இதனால், ரயில்வே ஊழியர்கள் இ- பாஸ் பெறுவதற்கு அலுவலகத்திற்கு வரவோ அல்லது காத்திருக்கவோ தேவையில்லை. ஊழியர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். அதேபோன்று ஒரேநேரத்தில் ஊழியர்கள் பலர் இ-பாஸ் பெறலாம். விரைவில் இதுகுறித்த விவரங்கள் வெளியிடப்பட்டு புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்று ரயில்வே தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், ரயில்வே ஊழியர்களும் தற்போது ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத நிலையில், விரைவில் ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாக ஊழியர்கள் மட்டும் டிக்கெட் முன்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.