மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர்-நாக்பூர் நெடுஞ்சாலையில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஓட்டுநர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
சியோனி மாவட்டத்தில் சபாரா பகுதியில் அரிசி மற்றும் சாத்துக்குடி பழங்களை ஏற்றிவந்த லாரிகள் ஒன்றோடொன்று நேருக்கு நேர் மோதியதில், லாரியின் முன்பகுதி தீப்பற்றி எறிந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர்கள் இருவர் உடல் கருகிய நிலையில் உயிரிழந்தனர்.
இரண்டு லாரிகளும் எதிரெதிர் திசைகளில் வேகமாக வந்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், நான்கு பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.