தொடர் மழையால் புணே அணைகளில் அதிகரித்த நீர்மட்டம்
கடந்த ஒரு வாரத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் புணேவுக்கு அருகிலுள்ள அணைகளில் நீர் இருப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் புணேவுக்கு அருகிலுள்ள அணைகளில் நீர் இருப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. ஜூலை 31 அன்று 9.86 டி.எம்.சி ஆக இருந்த நீர் இருப்பு கடந்த பதினைந்து நாட்களில் 21.07 டி.எம்.சி. ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, புணே நகரத்திற்கு குடிநீர் வழங்கும் நான்கு அணைகளின் மொத்தக் கொள்ளளவு 72.30 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து, கடக்வாஸ்லா அணையில் இருந்து குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வெள்ளிக்கிழமை ன்ஷெட் அணையில் 80 சதவீதமும், வராஸ்கான் அணையில் 66 சதவீதமும், பவானா அணையில் 58 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது.
Advertisement
ஆகஸ்ட் 20 வரை புணேவில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.