லடாக்கில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா
லடாக்கில் 74ஆவது இந்திய சுதந்திர தின விழா இந்திய - திபெத் எல்லை காவல்படையினரால் கொண்டாடப்பட்டது.
லடாக்கில் 74ஆவது இந்திய சுதந்திர தின விழா இந்திய திபெத் எல்லை காவல்படையினரால் கொண்டாடப்பட்டது.
நாடு முழுவதும் இந்தியாவின் 74ஆவது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாநில அரசுகள், பொதுமக்கள், காவல்துறையினர், ராணுவத்தினர் என பல தரப்பினரும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இந்திய திபெத் எல்லைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள லடாக் பகுதியில் எல்லைக் காவல் படையினரால் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. எல்லைக் காவல்படை வீரர்கள் மூவர்ணக் கொடியை ஏந்தி அணிவகுப்பு மேற்கொண்டனர்.
முன்னதாக கடல்மட்டத்திலிருந்து 14 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள எல்லைக் காவல் முகாமில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.