இந்தியா

மத்திய பிரதேசத்தில் குப்பைகளை அகற்ற புதிய திட்டம் அறிமுகம்

DIN

மத்தியபிரதேச மாநிலத்தை குப்பைகளற்ற மாநிலமாக மாற்ற சிறப்பு பிரச்சாரத்தை ஞாயிற்றுக்கிழமை அம்மாநில அரசு தொடங்கி வைத்தது.

மத்திய பிரதேசத்தில் அதிகரிக்கும் குப்பைகள் மாநிலத்தின் பல்வேறு சுகாதாரக் கேடுகளுக்கு வழிவகுக்கிறது. மாநிலத்தை குப்பைகளற்ற மாநிலமாக மாற்ற பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு புதிய பிரச்சாரத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மத்திய பிரதேச மாநிலம் சாகர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “காந்தி பாரத் சோடோ மத்தியப் பிரதேசம்” எனும் பிரச்சார திட்டத்தை  நகர்ப்புற நிர்வாக மற்றும் மேம்பாட்டு அமைச்சர் பூபேந்திர சிங் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பூபேந்திர சிங், “நகரங்களில் குப்பைகளை குவிப்பது ஒரு பெரிய பிரச்சினை” எனக் குறிப்பிட்டார்.

15 நாள் விழிப்புணர்வு பிரச்சாரத்தின்போது, நகர்ப்புற அமைப்புகள் அவற்றின் செயல்திறனுக்கு ஏற்ப தரவரிசைப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT