முகப்பு
இந்தியா

தன்னை கடத்திவிட்டதாகக் கூறி பெற்றோரிடம் ரூ.5 லட்சம் கேட்ட 14 வயது சிறுவன்

தன்னை கடத்தல்காரர்கள் கடத்திவிட்டதாக் கூறி தனது பெற்றோர்களிடம் ரூ.5 லட்சம் பிணையத்தொகை கேட்ட 14 வயது சிறுவனை காவல்துறையினர் மீட்டனர்.

Updated On : 17 ஆகஸ்ட், 2020 at 12:09 PM
கோப்புப்படம்
பகிர்:

தன்னை கடத்தல்காரர்கள் கடத்திவிட்டதாக் கூறி தனது பெற்றோர்களிடம் ரூ.5 லட்சம் பிணையத்தொகை கேட்ட 14 வயது சிறுவனை காவல்துறையினர் மீட்டனர்.

பிகார் மாநிலத்தின் பாட்னாவில் இணைய விளையாட்டிற்கு அடிமையாகிய 14 வயது சிறுவன் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி தனது நண்பனை சந்திக்கச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியேறி உள்ளார். ரூ.2 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு அலைபேசியுடன் வெளியேறிய சிறுவன் தனது தாய்க்கு தான் கடத்தப்பட்டதாக குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார். இதனால் பதறிய தாய் தனது மகனைக் காப்பாற்ற வேண்டி அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுகினார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவலர்கள் கடந்த புதன்கிழமை இரவு பூர்னியாவில் உள்ள ஒரு பேருந்து நிலையத்திலிருந்து அந்த சிறுவனை மீட்டனர்.
விசாரணையின் போது, ​​தனது தாய் ரூ .3.5 லட்சம் கடன் வாங்கியதாக அறிந்த சிறுவன அவரிடமிருந்து பணம் பறிப்பதற்காக போலியாக நாடகமாடியதாக தெரிவித்தார்.

Advertisement

மேலும் அந்தத் தொகையை வைத்து டெல்லி அல்லது மும்பையில் உள்ள கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர திட்டமிட்டிருந்ததாக பத்ரா நகர் காவல் நிலைய காவல் அதிகாரி பிரமோத் குமார் குறிப்பிட்டார்.

பணத்திற்காக தன்னைக் கடத்திவிட்டதாக சிறுவன் நாடகமாடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.