முகப்பு
இந்தியா

அசாமில் 80 ஆயிரத்தை எட்டியது கரோனா பாதிப்பு

அசாமில் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80,000-ஐ எட்டியுள்ளது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 200ஐ நெருங்கியுள்ளது.

Updated On : 18 ஆகஸ்ட், 2020 at 11:47 AM
Assam COVID tally nears 80,000.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:38 PM

அசாமில் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80,000-ஐ எட்டியுள்ளது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 200ஐ நெருங்கியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அசாமில் புதிதாக 2,792 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 79,667ஆக உள்ளது  என்று மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

தொற்று காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 197ஐ எட்டியுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் எட்டு பேர் பலியாகியுள்ளனர். வைரஸ் பாதித்த 1,519 பேர் நேர் வெளியேற்றப்பட்டுள்ளதை அடுத்து மொத்தம் 56,734 இதுவரை குணமடைந்துள்ளனர். 

Advertisement

தற்போது தொற்று பாதித்த 22,733 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.