நாட்டில் கரோனாவுக்கு பலியாவோர் விகிதம் 2% ஆகக் குறைந்தது
இந்தியாவில் கரோனா பாதித்து பலியாவோர் விகிதம் 2.00% ஆக குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புது தில்லி: இந்தியாவில் கரோனா பாதித்து பலியாவோர் விகிதம் 2.00% ஆக குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுநாள்வரை இந்தியாவில் சுமார் 3 கோடி மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டிருப்பதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,99,864 மாதிரிகள் கரோனா சோதனைக்கு உள்படுத்தப்பட்டிருப்பதாகவும் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா பாதித்து இதுவரை சுமார் 19.70 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இது கரோனா பாதித்து சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளை விட 2.93 மடங்கு அதிகமாகும்.
நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் 25% பேர்தான் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
தினந்தோறும் கரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை சராசரியாக 55 ஆயிரத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் கரோனா பாதித்து பலியாவோர் விகிதம் 2.00% ஆக குறைந்துள்ளது.