காவல் துறையில் ஒழுக்கக்கேடானவர்களா? புகார் தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண்
தெலங்கானாவில், பெண்ணிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாகத் தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் சந்தர் குமார் செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்தியாகாவல் துறையில் ஒழுக்கக்கேடானவர்களா? புகார் தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண்
தெலங்கானாவில், பெண்ணிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாகத் தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் சந்தர் குமார் செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தெலங்கானாவில், பெண்ணிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாகத் தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் சந்தர் குமார் செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்தத் தகவலை ஹைதராபாத் காவல் ஆணையர் அஞ்சனி குமார் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இத்துடன் அவர் மேலும் பதிவிட்டுள்ளதாவது:
"காவல் துறையினர் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபடுவதை சகித்துக்கொள்ள முடியாது. 9490616555 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்குத் தகவல் தெரிவியுங்கள். காவல் துறையில் உள்ள கறுப்பு ஆடுகளைக் கண்டறிய எங்களுக்கு உதவுங்கள்." என்று தெரிவித்துள்ளார் அஞ்சனி குமார்.