முகப்பு
இந்தியா

அசாமில் கரோனா பலி எண்ணிக்கை 200-ஐ தாண்டியது

அசாமில் கரோனா தொற்று பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளது என்று அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 19 ஆகஸ்ட், 2020 at 11:47 AM
Assam COVID death toll crosses 200
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:39 PM

அசாமில் கரோனா தொற்று பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளது என்று அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,534 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளதை அடுத்து, அந்த மாநிலத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 82,201 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், ஒரேநாளில் 6 பேர் உயிரிழந்த நிலையில், இறப்பு எண்ணிக்கை 203 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

Advertisement

நோய்த் தொற்று பாதித்து 23,701 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றிலிருந்து 58,294 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.