முகப்பு
இந்தியா

மூணாறு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு

​மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 20 ஆகஸ்ட், 2020 at 9:33 PM
கோப்புப்படம்
பகிர்:


மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி இரவு பெய்த பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அங்குள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த 78 பேர், அவர்களது உறவினர்கள் 4 பேர் என மொத்தம் 82 பேர் சிக்கினர்.

இதில் ஏற்கெனவே 6 மாதக் குழந்தை உள்பட மொத்தம் 63 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இந்த நிலையில், மேலும் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பலியானவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

முன்னதாக, மூணாறு நிலச் சரிவில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை அறிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.