முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஜூன் மாதத்தில் 41% கூடுதலாக மழைப்பொழிவு

நடப்பாண்டில் மகாராஷ்டிராவில் 547.6 மி.மீ. அளவுக்கு அதிக மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:09 PM
மகாராஷ்டிரத்தில் ஜூன் மாதத்தில் 41% கூடுதலாக மழைப்பொழிவு
பகிர்:

நடப்பாண்டில் மகாராஷ்டிராவில் 547.6 மி.மீ. அளவுக்கு அதிக மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்தது.இந்நிலையில் ஜூன் மாதம் முதல் பதிவான தரவுகளின்படி மகாராஷ்டிரத்தில் வழக்கத்தைவிட 41 சதவிகிதம் கூடுதல் மழை பொழிந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் சராசரி மழைப்பொழிவு 387.2 மிமீ ஆக இருக்கும். ஆனால் நடப்பாண்டில் இதுவரை 547.6 மிமீ மழை பெய்துள்ளது. 

கிழக்கு மகாராஷ்டிராவில் உள்ள கட்சிரோலி மாவட்டத்தில் புதன்கிழமை மாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மகாராஷ்டிரத்தின் நந்தூர்பார் மாவட்டத்தில் மட்டுமே வழக்கமான காலத்தை விட 28 சதவீதம் குறைவான மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →