முகப்பு
இந்தியா

கொல்கத்தா காவல் உதவி ஆணையர் கரோனாவுக்கு பலி

கொல்கத்தா காவல்துறை உதவி ஆணையர் உதய் சங்கர் பானர்ஜி கரோனா தொற்று காரணமாக இன்று மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். 

Updated On : 21 ஆகஸ்ட், 2020 at 12:38 PM
Kolkata Police Assistant Commissioner Uday Shankar Banerjee dies of Covid-19
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:40 PM

கொல்கத்தா காவல்துறை உதவி ஆணையர் உதய் சங்கர் பானர்ஜி கரோனா தொற்று காரணமாக இன்று மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். 

கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதியன்று உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆக.14-ல் அவருக்குத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. 

பின்னர், ஆகஸ்ட் 17-ல் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். 

Advertisement

அவரது மனைவிக்கும் தொற்று பாதித்த நிலையில், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கரோனா தொற்றால் இதுவரை ஒன்பது காவல் அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், மூத்த அதிகாரியான உதய் சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது என்று காவல் ஆணையர் அனுஜ் சர்மா கூறியுள்ளார். 

மேலும், அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.