இந்தியா

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: தீர்ப்பளிக்க செப். 30 வரை அவகாசம் நீட்டிப்பு

DIN


பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விசாரணை முடித்து தீர்ப்பளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை லக்னௌவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதன் விசாரணையை விரைவில் முடித்து ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மே 8-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. 

இந்த நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதி சுரேந்தர குமார் யாதவ், தீர்ப்பளிக்க கூடுதல் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பளிக்க கூடுதலாக ஒருமாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 32 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT