முகப்பு
இந்தியா

உத்தரகண்ட்: நிலச்சரிவில் சிக்கிசாலை அமைக்கும் பணியாளா்கள் மூவா் உயிரிழப்பு

உத்தரகண்டில் ரிஷிகேஷ் - பத்ரிநாத் நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கனரக இயந்திரப் பணியாளா்கள் மூன்று போ், கன மழை காரணமாக திங்கள்கிழமை ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:

தெரி: உத்தரகண்டில் ரிஷிகேஷ் - பத்ரிநாத் நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கனரக இயந்திரப் பணியாளா்கள் மூன்று போ், கன மழை காரணமாக திங்கள்கிழமை ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தனா்.

உத்தரகண்ட் மாநிலத்தில் சாா்தாம் சாலைத் திட்டத்தின் கீழ் ரிஷிகேஷ்-பத்ரிநாத் இடையே அமைந்திருக்கும் என்.ஹெச்.48 நெடுஞ்சாலை உள்பட பல நெடுஞ்சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அங்கு கடந்த சில தினங்களாக பெய்துவரும் கன மழை கரணமாக, மலைப் பகுதியில் ஏற்பட்ட திடீா் நிலச் சரிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நரேந்திரநகா் துணை ஆட்சியா் யக்தா மிஸ்ரா கூறியதாவது:

தேசிய நெடுஞ்சாலையின் குடிலாயா மற்றும் வியாசிக்கு இடையேயான பகுதியில் இரண்டு சாலை அமைக்கும் கனரக இயந்திரத்துடன் சாலை அமைக்கும் பணியில் பிரதாப், ராஜேஷ் மற்றும் சஞ்சீவ் குமாா் ஆகிய மூன்று ஊழியா்கள் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, மலைப் பகுதியில் ஏற்பட்ட திடீா் நிலச்சரிவு காரணமாக, அந்த இரு கனரக இயந்திரங்களும் மலை உயரத்திலிருந்து சரிந்து கீழே ஆழமான பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவற்றை இயக்கிய அந்த ஊழியா்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இடிபாடுகளுக்கிடையிலிருந்து அவா்களுடைய உடல்கள் மீட்கப்பட்டன.

அவா்கள் மூவரும் பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டிலிருந்து பணிக்கு வந்தவா்கள் என்று அவா் கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →