புதுச்சேரி ஜிப்மரில் கரோனா நோயாளி தற்கொலை முயற்சி
புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் கரோனா நோயாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், அங்குப் பதற்றம் நிலவியது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:41 PM
புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் கரோனா நோயாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், அங்குப் பதற்றம் நிலவியது.
புதுச்சேரியைச் சேர்ந்தவர் வேல் முருகன் (51). அவர் ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள படிக்கட்டின் கிரில்லில் தூக்குப்போட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்த நபரை மீட்டு, உடனடியாக வெண்டிலேட்டர் சிகிச்சையளித்து வருகின்றனர்.
Advertisement
மனச்சோர்வு காரணமாகத் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.