தெலங்கானாவில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 2,579 பேருக்குத் தொற்று
தெலங்கானா மாநிலத்தில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை இல்லாது ஒரு நாள் பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,579 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து ஒட்டுமொத்த பாதிப்பு 1.08,670 ஆக பதிவாகியுள்ளது.
மேலும், ஒரே நாளில் ஒன்பது பேர் பலியாகியுள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு 770 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
தெலங்கானாவில் நேற்று ஒரே நாளில் 36,282 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,752 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். மொத்தம் இதுவரை 84,163 தொற்றிலிருந்து குணமடைந்தனர். மாநிலத்தில் மீட்பு விகிதம் 77.44 சதவீதமாக உள்ளது.
வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் 17,226 உள்ளனர். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 23,737 ஆக உள்ளது.