நீட் தேர்வு: மூன்று மணி நேரத்தில் 4 லட்சம் நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம்
நீட் தேர்வு நுழைவுச் சீட்டு வெளியான நிலையில், முதல் மூன்று மணி நேரத்தில் 4 லட்சத்துக்கும் அதிகமான நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
நீட் தேர்வு நுழைவுச் சீட்டு இன்று வெளியான நிலையில், முதல் மூன்று மணி நேரத்தில் 4 லட்சத்துக்கும் அதிகமான நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் இன்று பிற்பகல் 12 மணிக்கு வெளியிடப்பட்டன. இதில் வெளியான முதல் மூன்று மணி நேரத்தில் சுமார் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. சுமார் 9.53 லட்சம் மாணவர்கள் ஜேஇஇ தேர்வுக்கும் 15.97 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்கும் விண்ணப்பித்துள்ளனர். https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
கரோனா காலத்தில் நீட் தேர்வு நடத்த எதிர்க்கட்சித் தலைவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.