முகப்பு
இந்தியா

ஜிஎஸ்டி கவுன்சிலின் 41-ஆவது கூட்டம் தொடங்கியது

ஜிஎஸ்டி கவுன்சிலின் 41-ஆவது கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
ஜிஎஸ்டி கவுன்சிலின் 41-ஆவது கூட்டம் தொடங்கியது
பகிர்:

ஜிஎஸ்டி கவுன்சிலின் 41-ஆவது கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

காணொலி வழியில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மாநிலங்களுக்கு வரி வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்கான நிதி ஒதுக்குவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி நடைமுறையால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடுசெய்ய மத்திய அரசு இழப்பீட்டு தொகையை வழங்கி வருகிறது. இந்நிலையில், கரோனா பாதிப்பால் மாநிலங்களுக்கான வருவாய் பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இச்சூழலில், இன்று கூடியிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்கள் சந்தித்து வரும் கடுமையான வரி வருவாய் பற்றாக்குறை மற்றும் அதை ஈடுசெய்ய மத்திய அரசு வரி வருவாயை திரும்ப அளிக்க மறுத்துவருவது ஆகியவை குறித்து எழுப்ப எதிா் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் முடிவு செய்துள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.