முகப்பு
இந்தியா

மிசோரம் மாநிலத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 ஆகப் பதிவு

மிசோரம் மாநிலம்,கவ்பக் பகுதியில் வியாழக்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 3.6 ஆக பதிவானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
கோப்புப்படம்
பகிர்:

மிசோரம் மாநிலம்,கவ்பக் பகுதியில் வியாழக்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 3.6 ஆக பதிவானது.

மிசோரம் மாநிலம்,கவ்பக் பகுதியில் வியாழக்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 3.6 ஆக பதிவானது.

இதுதொடா்பாக தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சம்பாயில் பகுதியிலிருந்து தென்கிழக்கில் 36 கி.மீ தூரத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை மாலை 6.16 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பூமிக்கடியில் 25 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் இலேசான நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.