முகப்பு
இந்தியா

கேரளத்தில் பினராயிக்கு எதிராக போராட்டம்: காங்கிரசார் மீது காவல்துறை தடியடி

கேரளத்தில் தங்கம் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
கோப்புப்படம்
பகிர்:

வயநாடு: கேரளத்தில் தங்கம் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தி வந்த வழக்கில் தூதரக முன்னாள் பணியாளர் ஸ்வப்னா சுரேஷை காவல்துறையினர் கைது செய்தனர்.

பினராயி விஜயனின் தலைமை செயலர் மற்றும் கேரள தகவல் தொடர்பு துறை செயலராக பதவியில் இருந்த எம்.சிவசங்கரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தங்கம் கடத்தலில் தொடர்புடையதாக இதுவரை 20க்கும் அதிகமானோரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதனிடையே கடந்த 25-ஆம் தேதி கேரள தலைமை செயலக கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் திட்டமிட்டு எரிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டன. இதனை கண்டித்து பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி இளைஞர் காங்கிரசார் வயநாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்தும் நோக்கில் காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

முழு கட்டுரையைப் படிக்க →