முகப்பு
இந்தியா

ஜார்கண்டில் செப்.30 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

ஜார்கண்ட் மாநிலத்தில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கரோனா பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
கோப்புப்படம்
பகிர்:

ஜார்கண்ட் மாநிலத்தில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கரோனா பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொற்று பாதிப்பு நிலைமைகளுக்கேற்ப மாநில அரசுகள் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை செயல்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை ஜார்கண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. 

அதன்படி பொருளாதார நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ள ஜேஇஇ, நீட் போன்ற போட்டித் தேர்வுகளை முன்னிட்டு ஜார்கண்ட் அரசு பொதுப்போக்குவரத்து சேவை செயல்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

பொதுமக்கள் அதிகமாகக் கூடும் மதவழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்டவைகளுக்கு தடை நீடிப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள், பிற கல்வி நிறுவனங்கள் செயல்பட தடை நீடிக்கிறது. மேலும் மாநிலத்திற்குள் பொதுப் போக்குவரத்திற்கான தடை தொடர்கிறது.

சனிக்கிழமை காலை நிலவரப்படி, ஜார்க்கண்டில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 676 ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →