சிகிச்சை முடிந்து வீடு திரும்புகிறார் அமித் ஷா
உடல்வலியால் அனுமதிக்கப்பட்டிருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா குணமடைந்துவிட்டார் என்று எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
உடல்வலியால் அனுமதிக்கப்பட்டிருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா குணமடைந்துவிட்டார் என்று எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு பிறகு குணமடைந்து வீடு திரும்பிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டாவது முறையாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடல்வலி மற்றும் உடல்சோர்வால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைச்சர் அமித் ஷா அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் இருந்தபடியே பணிகளை மேற்கொண்டுவந்த அவரை, எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு முழுமையாக கண்காணித்து வந்தது.
இதனிடையே உள்துறை அமைச்சர் அமித் ஷா குணமடைந்துவிட்டதாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அவர் விரைவில் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.