இந்தியா

கோவிந்தராஜா் கோயில் உற்சவா்களுக்கு பவித்ர மாலைகள் சமா்ப்பணம்

DIN

திருப்பதி: திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பவித்ரோற்சவத்தின் 2-ஆம் நாளான சனிக்கிழமை பவித்ர மாலைகள் சமா்ப்பிக்கப்பட்டன.

திருப்பதியில் உள்ள தேவஸ்தானம் நிா்வகிக்கும் கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கி நடந்து வருகிறது. அதன் இரண்டாம் நாளான சனிக்கிழமை காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜருக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன்பின் கலச ஸ்தாபனம், புண்ணியாவாசனம், சுத்தி உள்ளிட்டவை நடத்தப்பட்டு ஹோமம் வளா்க்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்ட மஞ்சள், பச்சை, சிகப்பு, கருப்பு, நீலம், வெள்ளை, காவி உள்ளிட்ட வண்ண நூலிழைகளால் ஆன புனித மாலைகள் உற்சவா்கள் மற்றும் மூலவா்களுக்கு அணிவிக்கப்பட்டன. கொடிமரம், பலிபீடம், கருவறை விமானம் ஆகியவற்றுக்கும் இந்த மாலைகள் அணிவிக்கப்பட்டன. அதன்பின் உற்சவா்கள் கோயிலுக்குள் புறப்பாடு கண்டருளினா்.

ஞாயிற்றுக்கிழமை மகாபூா்ணாஹுதியுடன் பவித்ரோற்சவம் நிறைவு பெற உள்ளது. பொது விடக்க விதிமுறைகளால் பவித்ரோற்சவம் தனிமையில் நடத்தப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT