கரோனா நெறிமுறைகளுடன் ஓணம் கொண்டாடவும்: பினராயி விஜயன்
கரோனா நெறிமுறைகளை பின்பற்றி ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்தியாகரோனா நெறிமுறைகளுடன் ஓணம் கொண்டாடவும்: பினராயி விஜயன்
கரோனா நெறிமுறைகளை பின்பற்றி ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்: கரோனா நெறிமுறைகளை பின்பற்றி ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கரோனா நிலவரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன் தெரிவித்துள்ளதாவது, ''கரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில் ஓணம் பண்டிகையை கொண்டாட உள்ளோம். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை மக்களுக்கு நம்பிக்கையையும், நல்ல எதிர்காலத்தையும் வழங்க வேண்டும். கரோனா நெறிமுறைகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளியை கடைபிடித்து ஓணம் பண்டிகையை மக்கள் கொண்டாட வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.
''ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்ற முடிவில் கேரள அரசு உறுதியாக உள்ளது. மாநிலங்களுக்கு வரவேண்டிய தொகையை மத்திய அரசு தரவேண்டியது அரசியலமைப்பு உரிமை'' என்று கூறினார்.
மேலும், ''கரோனாவால் புதிதாக 2,379 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 44 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். புதிதாக 6 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 286-ஆக அதிகரித்துள்ளது''. என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.