முகப்பு
இந்தியா

மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை

மேற்கு வங்க மாநிலத்தில் மெட்ரோ மற்றும் மின்சார ரயில் சேவையைத் தொடங்க மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
பகிர்:

மேற்கு வங்க மாநிலத்தில் மெட்ரோ மற்றும் மின்சார ரயில் சேவையைத் தொடங்க மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொதுப் போக்குவரத்துகளான பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டாலும் பொதுப் போக்குவரத்துக்கு தொடர்ந்து தடை நீடித்து வருவதால் மக்கள் வெகுமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மின்சார மற்றும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதில் மாநில அரசுக்கு சிக்கல் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் இதுவரை 1 லட்சத்து 53 ஆயிரத்து 754 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →