இந்தியா

இந்தியாவில் புதிதாக 78,761 பேருக்கு கரோனா; மேலும் 948 பேர் பலி

DIN

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 78,761 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 948 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 78,761 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கரோனா பாதிப்பு 35 லட்சத்தைக் கடந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 35 லட்சத்து 42 ஆயிரத்து 734 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 948 பேர் உள்பட கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63,498 ஆக உயர்ந்துள்ளது. 

அதேநேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 64,935 உள்பட நாடு முழுவதும் 27,13,934 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது 7,65,302 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்தியாவில் கரோனா மீட்பு விகிதம் 76.61% ஆகவும், இறப்பு விகிதம் 1.79% ஆகவும் உள்ளது. 

உலகளவில் கரோனா தொற்று அதிகமுள்ள நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

பாதிப்பு:  35,42,734
பலி:  63,498
குணமடைந்தோர்: 27,13,934
சிகிச்சை பெற்று வருவோா்: 7,65,302

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT