இந்தியா

கரோனா பாதித்த இந்தியாவின் முதல் பெண் இருதய நோய் நிபுணர் மறைவு

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்ட 103 வயதான இந்தியாவின் முதல் பெண் இருதயநோய் நிபுணர் டாக்டர்.பத்மாவதி சிவராமகிருஷ்ணா தனது  ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

பத்ம விபூஷண் விருது பெற்றவரான டாக்டர். பத்மாவதி சிவராமகிருஷ்ணா கரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 11 நாட்களாக தில்லியில் உள்ள தேசிய இருதய நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை திடீரென மாரடைப்புக்குள்ளான அவர் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சுவாசித்து வந்தார். பின் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

இந்திய இருதயத்துறையின் தாய் என அழைக்கப்படும் பத்மாவதி சிவராமகிருஷ்ணா 1917ஆம் ஆண்டு தற்போதைய மியான்மரில் பிறந்தவர். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் 1942ஆம் ஆண்டு இந்தியாவிற்கு குடியேறினார். ரங்கூனில் பட்டம் பெற்ற அவர் தனது உயர்படிப்புகளை வெளிநாடுகளில் பயின்றார். இந்தியா திரும்பியதும், தில்லியில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.

1962 ஆம் ஆண்டில், டாக்டர்.பத்மாவதி அகில இந்திய இதய அறக்கட்டளையை நிறுவி, 1981 ஆம் ஆண்டில் தேசிய இதய நிறுவனத்தை  நவீன இதய மருத்துவமனையாக அமைத்தார்.

இந்தியாவில் இருதயவியல் வளர்ச்சியில் அவர் செய்த சாதனைகள் மற்றும் பங்களிப்புகளுக்காக,  1967 இல் பத்ம பூஷண் மற்றும் 1992 இல் பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் இந்திய அரசால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

SCROLL FOR NEXT