இந்தியா

நாட்டில் புதிதாக 78,512 பேருக்கு கரோனா; மேலும் 971 பேர் பலி

DIN

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 78,512 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 971 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 78,512 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கரோனா பாதிப்பு 36 லட்சத்தைக் கடந்துள்ளது.

திங்கள்கிழமை காலை நிலவரப்படி, 36 லட்சத்து 21 ஆயிரத்து 246 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 971 பேர் உள்பட கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64,469 ஆக உயர்ந்துள்ளது. 

அதேநேரத்தில் நாடு முழுவதும் 27,74,802 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் ஒரேநாளில் 60,868 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 7,81,975 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

உலகளவில் கரோனா தொற்று அதிகமுள்ள நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

பாதிப்பு:  36,21,246
பலி:  64,469
குணமடைந்தோர்: 27,74,802
சிகிச்சை பெற்று வருவோா்: 7,81,975

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT